உள்ளூர் செய்திகள்
போலீசார் விசாரணை

இந்திய இறையாண்மைக்கு எதிராக ஆரோவில் பவுண்டேஷன் கட்டிடத்தில் வாசகம்- போலீசார் விசாரணை

Published On 2022-04-28 11:19 GMT   |   Update On 2022-04-28 11:19 GMT
ஆரோவில் நிர்வாகத்துக்கு எதிராக வாசகம் எழுதிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆரோவில் பவுண்டேசன் சார்பு செயலர் சீனிவாச மூர்த்தி ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சேதராப்பட்டு:

புதுவையை ஒட்டிய தமிழக பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது. இங்கு அன்னையின் கனவு திட்டத்திற்கான விரிவாக்கப் பணிகள் நடந்தபோது ஆரோவில்லில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுக்கு பின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் ஆரோவில் சர்வதேச நகரம் மையத்தில் அமைந்துள்ள டவுன்ஹால் முகப்பு கட்டிடத்தின் சுவரில் வாசகம் ஒன்று எழுதப்பட்டு இருந்தது.

நீல நிற பெயிண்டில் ஆரோவில் இப்போது சுதந்திர நாடாக மாற வேண்டும் என்ற வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆரோவில் பவுண்டேஷன் சார்பு செயலர் சீனிவாசமூர்த்தி ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் இந்திய இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் விதம், இந்திய அரசாங்கத்தை அவமதிக்கும் விதமாக யாரோ வாசகத்தை எழுதி உள்ளனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ஆரோவில் நிர்வாகத்துக்கு எதிராக வாசகம் எழுதப்பட்டுள்ள சம்பவம் ஆரோவில் வாசிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News