உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் துணை சபாநாயகர் ஆய்வு
கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் துணை சபாநாயகர் ராஜவேலு ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பிரிவில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் பள்ளி அறையில் உள்ள மின் விசிறி, மின்விளக்கு போன்றவற்றை சேதப்படு த்தியுள்ளனர்.
இதனால் பள்ளியில் மாணவர்களுக்கு அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகின்றது. ஆசிரியர்கள் தட்டிக் கேட்பதற்கு அச்சப்படு கின்றனர். பள்ளி வளாக பகுதிகளில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனால் இன்று துணை சபாநாயகர் ராஜவேலு பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.
மாணவர்கள் சேதப்படுத்திய அறைகளுக்குச் சென்று சோதனை செய்தார். மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு அதிகமாக இருப்பதை கண்டறிந்தார்.
பின்னர் பள்ளி முதல்வர் புவனேஸ்வரியிடம் தகராறில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
மேற்கொண்டு நெட்டப்பாக்கம் போலீசாரை தொடர்பு கொண்டு பள்ளியில் மாணவர்களை கண்காணிக்கும் படி உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிகல்வித் துறை அமைச்சர் பள்ளியை பார்வையிட வேண்டுமென பொதுமக்கள்கூறினர்.