உள்ளூர் செய்திகள்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்திய காட்சி.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

Published On 2022-04-28 14:23 IST   |   Update On 2022-04-28 14:23:00 IST
மங்கலம் வட்டார காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடந்தது.
புதுச்சேரி, ஏப்.27-

மங்கலம் வட்டார காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் (ஜி.பி.ஆர்.எஸ்) தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். புதுவை மாநில காங்கிரஸ் துணை தலைவரும், முன்னாள் அரசு கொறடாவுமான அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், மாநில காங்கிரஸ் செயலாளர்கள் சிவசண்முகம், ரகுபதி மற்றும் செந்தில்குமரன், ஜி.பி.ஆர்.எஸ் தலைவர் அமுதரசன் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர்.

Similar News