உள்ளூர் செய்திகள்
.

சாமல்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தம்பதி

Published On 2022-04-28 13:51 IST   |   Update On 2022-04-28 13:51:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே தம்பதி சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெரிகே பள்ளியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 41). இவரது மனைவி நர்கீஸ் (36).  இந்த தம்பதிக்கு முகமது உசேன் (12) பாஷா (8) என 2 மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில் குடும்ப பிரச்சனை தொடர்பாக அவரது மைத்துனர் முனவர்பாஷா மற்றும் சையத் பாட்சா ஆகிய இருவரும் தன்னை அடித்து விட்டதாக சாமல்பட்டி  போலீஸ் நிலையத்தில் ஜாகீர் உசேன் புகார் கொடுத்தார். 

இந்தப் புகாரின் பேரில் சாமல்பட்டி போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக தங்கள் ஜமாத்தில் பேசிக் கொள்வதாக கூறியதால் சாமல்பட்டி போலீசார் வழக்கை முடித்தனர். 

இந்த நிலையில் ஜாகிர் உசேன் மற்றும் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் தன்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என கூறி கெரிகேபள்ளி மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.  சம்பவ இடத்திற்கு வந்த சாமல்பட்டி போலீசார் ஜாகீர் உசேனிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இதனை தொடர்ந்து ஜாகிர் உசேன் மறியலை கை விட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News