உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் பொது இடங்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்- கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள்
திருவண்ணாமலையில் பொது இடங்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வரவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அவ்வாறு முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.
அரசு, தனியார் அலுவலங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய கல்வியியல் நிலையங்களில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பஸ்களில் அனைத்து பயணிகளும் முககவசம் அணிந்து பயணம் செய்வதை கண்டக்டர் மற்றும் டிரைவர் கண்காணிக்க வேண்டும்.
அனைத்துவித வியாபார மையங்களிலும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து கடைக்குவர அறிவுத்தவேண்டும். வழிப்பாட்டுதலங்களுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து வருவதை கோவில் நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும் என கலெக்டர் முருகேஷ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.