உள்ளூர் செய்திகள்
செல்போன் பறித்த ஓட்டல் ஊழியர் 2 பேர் கைது
திருப்பூர் பனியன் ஏஜெண்டிடம் செல்போன் பறித்த ஓட்டல் ஊழியர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
திண்டுக்கல்லை சேர்ந்தவர் ராமர் (வயது32).இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் பனியன் ஆர்டர் சம்பந்தமாக புதுவை வந்தார். பின்னர் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள கடையில் சாப்பிட்டு விட்டு அவர் தங்கியிருந்த லாட்ஜ்க்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராமரை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
தாக்குதலில் காயமடைந்த ராமர் புதுவை அரசு ஆஸ்பத்திரியல் சிகிச்சை பெற்ற பின்னர் இதுகுறித்து பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் கூடப்பாக்கத்தை சேர்ந்த அரசு (20),காரைக்காலை சேர்ந்த ஜான்சன் (32)ஆகியயோர் என்பது தெரியவந்தது.இவர்கள் இருவரும் புதுவையில் உள்ள ஒட்டலில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது.பின்னர் அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த வாலிபர்களை கைது செய்தனர்.