உள்ளூர் செய்திகள்
கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி- ரங்கசாமி தொடங்கி வைத்தார்
உப்பளம் தொகுதியில் ரூ.2 3/4 கோடி செலவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டையில் உள்ள வாணரப்பேட்டை, கடலூர் ரோடு முதல் உப்பனார் வாய்க்கால் வரை உள்ள வாணரப்பேட்டை வாய்கள் புனரமைப்பு செய்தல் சம்பந்தமாக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை யாக வைத்தனர்.
இதன் சம்பந்தமாக 8 மாத காலமாக கடும் முயற்சி எடுத்து அதிகாரிகளை தொடர்ச்சியாக நேரில் சந்தித்தும் மனு அளித்தும் இருந்தது குறிப்பிடத்தக்கது, மேலும் பொதுப்பணித்துறை மற்றும் புதுவை நகராட்சியில் பணம் இல்லாததால் புதுவை ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் செய்து கொடுக்கும்படி கென்னடி எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் இன்று புதுவை ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 2. கோடியே 81 லட்சத்து 53 ஆயிரத்து 350 மதிப்பீட்டில் பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி முன்னிலை வகித்தார்.இதில் உள்ளாட்சி துறை செயலாளர் வல்லவன், புதுவை ஸ்மார் சிட்டி திட்ட தலைமை செயல் அதிகாரி டாக்டர் அருண், உள்ளாட்சித் துறை இயக்குனர் ரவிதீப் சிங் சாஹர் புதுவை நகராட்சி ஆணையர் சிவகுமார், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், மற்றும் தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, பொருளாளர் சண்முகம், மாநில பிரதிநிதி காத்தலிங்கம், மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தி.மு.க. பிரமுகர்கள் பிராங்கிளின் மற்றும் நோயல், கிளை செயலாளர்கள் செல்வம் மற்றும் டேவிட், இளைஞரணி அரவிந்த் , லாரன்ஸ், காலப்பன், மணிமாறன், ஆறுமுகம், செல்லப்பன், அன்வர், தினேஷ்,ரவி, ஈசாக்கு, அறிவழகன், செழியன்,மணி, கணேசன், மாயவன்,ஸ்டாலின், பாலாஜி, முத்து, மோரீஸ், ரகுமான் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.