உள்ளூர் செய்திகள்
சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தொடங்கி வைத்தார்.

தார் சாலை அமைக்கும் பணி- சாய்.ஜெ.சரவணன் குமார் தொடங்கி வைத்தார்

Published On 2022-04-27 14:28 IST   |   Update On 2022-04-27 14:28:00 IST
அரியாங்குப்பம் கொம்யூனில் ரூ.1.48 கோடியில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார்தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
 
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட அரியாங்க்குப்பம்,  வீராம்பட்டினம் கிராமத்தில்  உள்ள சாலைகளான துறைமுக சாலை, நாகூரான் சாலை, சின்ன வீராம்பட்டினம் சாலை, அரிக்கன் மேடு சாலை ஆகிய சாலைகளுக்கு தார் சாலை அமைக்கும் பணி பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் உள்ளாட்சி துறையின் கீழ் அரியாங் குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூ.1கோடியே 84 லட்சம் செலவில்  நடைபெறுகிறது.

இந்த பணியினை மேற்கொள்வதற்கான பூமி பூஜை, அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், பாஸ் கரன் எம்.எல்.ஏ.ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் உள்ளாட்சித்துறை இயக்குனர் ரவிதீப் சிங்க் சஹார், உள்ளாட்சி துறை கண்காணிப்பு பொறியாளர் சாய் சுப்ரமணியன் உள்ளாட்சிதுறை செயற் பொறியாளர் திருநாவுக்கரசு, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) முகமது இஸ்மாயில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், அரியாங் குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உதவி   பொறியாளர், நாகராஜன், அரியாங்குப்பம் இளநிலை பொறியாளர்கள், சுரேஷ், அகிலன் கட்டுமான நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News