உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அரசு அருட்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பீரங்கி கல்குண்டு.

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் பீரங்கியின் கல் குண்டு

Published On 2022-04-27 14:25 IST   |   Update On 2022-04-27 14:25:00 IST
கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக பீரங்கியின் கல் குண்டு வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாதம் ஒரு வரலாற்று பொருள் காட்சிக்கு வைத்து வருகின்றனர். அதன்படி, இம்மாதத்திற்கான காட்சி பொருளாக பீரங்கியின் கல் குண்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராசு கூறிய தாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல மலைக் கோட்டைகள் உள்ளன. கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஜெகதேவி, மகா ராஜ கடை, தட்டக்கல், வீரபத்ரதுர்க்கம், நாகமலை, மல்லி கார்ஜுனதுர்க்கம் ஆகிய மலைகளில் கோட்டைகள் உள்ளது குறிப்பிடத் தக்கவைகளாகும். மண்ணால் ஆன  தரைக்கோட்டைகள் இருந்ததற்கான தடயங் களும் சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

பீரங்கி கல் குண்டுகள் தயாரிக்க உறுதியற்ற கருங்கற்களே தேர்ந் தெடுக்கப்படுகின்றன. ஏனெனில்  அவைதான் பீரங்கி யில் இருந்து வெடிமருந்தின் உதவியுடன் வேகமாக வெடித்து சிதறும் போது எளிதில் பல சிறு துண்டுகளாக உடைந்து பல பேரை ஒரே நேரத்தில் தாக்கும். 
தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இக்கல்குண்டு சிறிய அளவுடையது. இவை 10 செ.மீ. விட்டமும், 2 கிலோ  எடையும் கொண்டதாகும். இக்கல்குண்டை பொதுமக்கள் பார் வையிட்டு வியப்படைந்து வருகின்றனர்.
 இவ்வாறு அவர் கூறினார்.

Similar News