உள்ளூர் செய்திகள்
தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் விதமிருந்த பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்திய போது எடுத்த படம்.

வேப்பனப்பள்ளி அருகே தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் திருவிழா

Published On 2022-04-27 13:19 IST   |   Update On 2022-04-27 13:19:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தாசிரிப்பள்ளி கிராமத்தில் தர்மராஜா மற்றும் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். 

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகளால் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு தர்மராஜா மற்றும் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. 

இந்த விழாவில் கடந்த 5 நாட்களாக திரவுபதி அம்மன் மற்றும் தர்மராஜா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று தர்ம கோவில் திருவிழாவை முன்னிட்டு அர்ஜூனன் தபசு நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தில் அர்ஜுனன் வேஷமிட்டு நாடக குழுவினர் மரத்தின் மீது ஏறி தவமிருந்து கருடன் வந்து மூன்று முறை வட்டமிட்ட பிறகு கீழ இறங்கி வந்தனர். மேலும் இந்த விழாவில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு  விரதம் இருந்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு அர்ஜுனன் தவசு நாடகத்தில் விரதமிருந்த அர்ஜினன் அவர்களுக்கு குழந்தை வரமளித்தார். இந்த விழாவில் தாசரிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்தனர்.

Similar News