உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் பலி
கிருஷ்ணகிரியில் நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதற்காக கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளை களை அதன் உரிமையாளர்களை வாகனத்தில் அழைத்து வந்தனர்.
கோ -பூஜை செய்யப்பட்டு, வாடி வாசல் வழியாக ஒவ் வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நிமிடங்களில் கடந்தகாளைகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் 400 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடியது. இந்த விழாவை காண கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
இந்த நிலையில் எருது விடும் விழாவில் கூட்ட நெரிசலில் நின்று கொண்டிருந்த திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள மடவாளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 45) என்பவரை மாடு முட்டி தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச் சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார். 15 பேர் காயம் அடைந்தனர். எருது விடும் விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டனர்.