உள்ளூர் செய்திகள்
கர்நாடகாவில் இருந்து சேலத்துக்கு கடத்தல் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் டிரைவர் கைது
கர்நாடகாவில் இருந்து சேலத்துக்கு கடத்திய ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த தளி போலீஸ் ஸ்டேஷன் காவல் உதவி ஆய்வாளர் கதிரேசன் தலைமையிலான போலீசார் கும்ளாபுரம் சோதனைச் சாவடியில் நேற்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது குட்காவை கடத்தி செல்வது தெரிந் தது.
இதனால் லாரி டிரைவரான சேலம் மாவட்டம் தென்னங் குடிபாளையத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசார ணையில் சேலத்திற்கு குட்காவை கடத்தி செல்வது தெரிந்தது.
இதையடுத்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.5 டன் குட்கா மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தளி இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.