உள்ளூர் செய்திகள்
.

கொத்தப்பள்ளி கிராமத்தில் எருதாட்ட விழா

Published On 2022-04-23 15:10 IST   |   Update On 2022-04-23 15:10:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், கொத்தப்பள்ளி கிராமத்தில் எருதாட்ட விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சானமாவு ஊராட்சி டி. கொத்தப்பள்ளி  கிராமத்தில் அமைந்த தர்மராஜ சாமி கோவில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சானமாவு,டி. கொத்தப் பள்ளி, ஒன்னல் வாடி, ஒசூர், தொப்பள்ளி பேரண்டப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி உத்தனப்பள்ளி, டி.குருபரப்பள்ளி, மற்றும் சுற்றுவட்டாரங் களில் இருந்து 5000 மேற்பட்ட மக்கள் வருகை தந்தனர்.  நிறைவு நாளாக எருதுவிடும் விழா நடைபெற்றது.

இந்த எருது விடும் விழாவில் 500 க்கும் மேற்பட்ட எருதுகள் வரவழைக்கப்பட்டது. சீறிப்பாய்ந்த எருதுகளை 300 மேற்பட்டவர்கள் எருதுகளை அடக்கினர்.

Similar News