உள்ளூர் செய்திகள்
அரூரில் பப்பாளி விலை உயர்வு கிலோ ரூ.15க்கு விற்பனை
அரூரில் பப்பாளி விலை உயர்வால் கிலோ ரூ.15க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டத்தில் அரூர், கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி உள்பட பல்வேறு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பப்பாளி மரங்களை வளர்த்து வருகின்றனர்.
இங்கு விளை விளக்கப் படும் பப்பாளியை வியாபாரிகள் நேரடியாக வியாபாரிகளிடம் கொள்முதல் செய்து பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
தற்போது தொடர்மழை பெய்து நல்ல வெயில் அடிப் பதால் பப்பாளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் விவசாயிகளிடம் பப்பாளியை கிலோ ரூ.15&க்கு மொத்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனை மார்க்கெட், உழவர்சந்தை மற்றும் வாரச்சந்தைகளில் கிலோ ரூ. 50 வரை விற்பனை செய்கின்றனர்.
கடந்த வாரங்களை விட பப்பாளி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளிடம் கூடுதல் விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.