உள்ளூர் செய்திகள்
.

சூளகிரி பகுதியில் தொடர் அட்டகாசம்: 4 விவசாயிகளின் மாடுகளை திருடிய கும்பல்

Published On 2022-04-23 14:52 IST   |   Update On 2022-04-23 14:52:00 IST
சூளகிரி பகுதியில் 4விவசாயிகளின் மாடுகளை திருடிய கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓசூர்,

சூளகிரி பகுதியில் தொடரும் மாடு திருட்டால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பிள்ளை  கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது40)விவசாயி. இவர் வீட்டின் அருகே, இரு கறவை மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியை நேற்று முன்தினம் இரவு கட்டி வைத்திருந்தார்.

அதேபோல், அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (35) வீட்டின் அருகே, ஒரு மாட்டை கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை 1.30 மணிக்கு மாட்டு கொட்டகைக்குள் சென்ற இரு வாலிபர்கள், மூன்று மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியை திருடி சென்றனர். இந்த காட்சிகள், அப்பகுதியில் இருந்த ‘சி.சி.டி.வி’ கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த, 5ந் தேதி அதிகாலை சூளகிரி மில்லத் நகரை சேர்ந்த அழகேசரெட்டி மற்றும் சூளகிரி கீழ் தெரு துரை ஏரி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோரது, தலா இரு மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். 

இது தொடர்பாக, சூளகிரி போலீசில், நான்கு விவசாயிகளும் புகார் செய்துள் ளனர். சூளகிரி சுற்றுப்புற பகுதியில், தொடர்ந்து மாடு திருட்டு அதிகரித்து வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதனால் மாடுகளை திருடும் மர்ம கும்பலை பிடிக்க போலீசார் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News