உள்ளூர் செய்திகள்
வெற்றி பெற்றவர்களுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கிய போது எடுத்த காட்சி.

பா.ஜனதா சார்பில் விளையாட்டுப் போட்டிகள்

Published On 2022-04-22 14:23 IST   |   Update On 2022-04-22 14:23:00 IST
பா.ஜனதா சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற் றி பெற்றவர்களுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா கட்சியின் சார்பில் திருபுவனை மற்றும் திருப்பூர் பகுதிகளில்  இருளர் இன மக்களை சந்தித்து அவர்களுக்கு போட்டிகள் நடத்தி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. 

இதில் பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. வெங்கடேசன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பழுங்குடியினர் தலைவர் சுகுமார், கராத்தே முருகன், நாகராஜ், புகழேந்தி, பாலாஜி, விஸ்வநாதன், சிவக்குமார், வெங்கடேசன், தொகுதி பொது செயலாளர் பாலகுமர், செயலாளர், மோகன்ராஜ், சத்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 மேலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மத்திய அரசின் பயனுள்ள திட்டங்கள் குறித்து எம்.எல்.ஏ. வெங்கடேசன் விளக்கி கூறினார்.

Similar News