உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

குடியாத்தத்தில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் விழா

Published On 2022-04-15 16:22 IST   |   Update On 2022-04-15 16:22:00 IST
குடியாத்தத்தில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.திருக்கல்யாணத்தை முன்னிட்டு சாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கோவில் தர்மகர்த்தா பி.ஹேமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஏ.அமுலு அமர், மீனாட்சி அம்மன் நகர் குடியிருப்போர் நலச்சங்க சட்ட ஆலோசகர் கே எம். பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருமாங்கல்யம் பிரசாதம் வழங்கப்பட்டது, தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கல்யாணம் மற்றும் கும்பாபிஷேக கமிட்டியினர், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News