உள்ளூர் செய்திகள்
குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி ரோடு முழுவதும் சேறும், சகதியுமாக மாறியது.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Published On 2022-04-11 13:09 IST   |   Update On 2022-04-11 13:09:00 IST
மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி குழாய் பதித்தனர்.

அப்போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் சென்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு மக்கள் புகார் தெரிவித்தும் சரிசெய்ய-வில்லை. இதனால் கடந்த 3 நாட்களாக சாலையில் குடிநீர் செல்கிறது. 

மேலும் அந்த சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் வாகனங்களில் செல்வோர் மீது படுகிறது. பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது சேற்று நீர் வாகனங்கள் மூலம் வாரி அடிக்கப் படுவதால் மிகவும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். 

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News