உள்ளூர் செய்திகள்
கைது

மாணவியை கடத்தி திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவர் கைது

Published On 2022-04-09 09:46 IST   |   Update On 2022-04-09 09:46:00 IST
மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மொடக்குறிச்சி:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காட்டு வலசு அண்ணமார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் 19 வயது வாலிபர். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் மொடக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தீபா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் மொடக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் என்ஜினீயரிங் மாணவர் 8ம் வகுப்பு மாணவியுடன் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்ததாகவும், அங்கு சரியாக வேலை கிடைக்காததால் மீண்டும் ஊருக்கு வந்த இடத்தில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News