உள்ளூர் செய்திகள்
வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Published On 2022-04-08 15:41 IST   |   Update On 2022-04-08 15:41:00 IST
கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்தில் செத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கோபி:

கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்தில் செத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டம் இன்று காலை தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

இந்த நிலையில் கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சொத்து வரி உயர்வு  குறித்த தீர்மானம் வந்த போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 12 பேர் எழுந்து இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

பின்னர் கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து மீண்டும் சிறிது நேரம் கழித்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதா அ.தி.மு.க கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.

Similar News