உள்ளூர் செய்திகள்
குண்டேரிப்பள்ளம் அணையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
குண்டேரிப்பள்ளம் அணை சுற்றுலாதளத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அணுகுசாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு:
குண்டேரிப்பள்ளம் அணை சுற்றுலாதளத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அணுகுசாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வட்டம், டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அணுகுசாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ரூ.25.22 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளுக்கான ஓய்வு அறைகள், ரூ.26.64 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை, அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல், ரூ.78.31 லட்சம் மதிப்பீட்டில் வாகனம் நிறுத்துமிடத்தில் பாதுகாப்பு அரண் அமைத்தல் மற்றும் ரூ.56.23 லட்சம் மதிப்பீட்டில் அணுகு சாலை அமைத்தல் போன்ற பணிகள் முடிவுற்று பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க தயார் நிலையில் உள்ளது.
இப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் குண்டேரிப்பள்ளம் அணையில் பூங்கா அமைத்து பராமரித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் குண்டேரிப் பள்ளம் அணையினையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு அணையின் நீர் கொள்ள ளவு, நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக கோபி செட்டிபாளையம் பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் கையுந்துபந்து, கபாடி, டேபிள் டென்னிஸ், சதுரங்கம், கேரம் மற்றும் யோகா போன்ற விளை யாட்டுகள் விளையாடு வதற்காக செயல்படும் கையுந்து பந்து உள் விளையாட்டு அரங்கம் மற்றும் கபடி ஆடுகளத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம் பாளையம் ஊராட்சி பகுதியில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான முறையில் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு அலு வலர்களுக்கு அறிவுறுத் தினார்.
இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவிப் பொறியாளர் கல்பனா, கோபிசெட்டிபாளையம் தாசில்தார் தியாகராஜன் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.