உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.82 -க்கு விற்பனை
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.82 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.82 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
5 மாநில சட்டசபை தேர்தல், ரஷியா- உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் காரணமாக 137 நாட்களுக்குப் பிறகு கடந்த மாதம் 21-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது.
அதிலிருந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல், விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.44-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ. 99.54 காசுக்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல், விலை உயர்ந்துள்ளது. ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மேலும் 38 காசுகள் அதிகரித்து ரூ.109.82 காசுக்கு விற்பனை ஆனது. இதேப்போல் ஒரு லிட்டர் டீசல் மேலும் 38 காசுகள் அதிகரித்து ரூ.99.92 காசுக்கு விற்பனை ஆனது. அதாவது கடந்த 14 நாட்களில் 12 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிரொலி காரணமாக மற்ற பொருட்களின் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.