உள்ளூர் செய்திகள்
கைது

ரிஷிவந்தியம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2022-04-03 17:22 IST   |   Update On 2022-04-03 17:22:00 IST
ரிஷிவந்தியம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:

ரிஷிவந்தியம் அருகே காட்டுஎடையார் பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த திருக்கோவிலூர் அடுத்த மொகலார் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்(24) என்பவரை பிடித்து அவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றி விசாரித்தனர். 

அதில், அவர், பாவந்தூர், காட்டுகொட்டகையைச் சேர்ந்த சுரேஷ்(36) என்பவரிடம் வாங்கியதாக கூறினார். அதனைத் தொடர்ந்து போலீசார், சுரேஷைப் பிடித்து விசாரித்தனர். மேலும், அவர் விளைநிலத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவர் மீது வழக்கு பதிவு செய்து சுபாஷ், சுரேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Similar News