உள்ளூர் செய்திகள்
ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு டீ கடையில் புதிய விலை பட்டியல் அறிவிப்பு நோட்டீசை பணியாளர் ஒட்டிய போது எடுத்த

ஈரோட்டில் டீ விலை 12 ரூபாய், காபி 15 ரூபாய் ஆக உயர்ந்தது

Published On 2022-04-03 12:35 IST   |   Update On 2022-04-03 12:35:00 IST
ஈரோடு மாவட்டத்தில் கியாஸ் விலை தொடர்ந்து அதிகரிப்பு உள்ளதால், இதனால் டீ விலை 12 ரூபாய், காபி 15 ரூபாய் ஆக உயர்ந்ததுள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கியாஸ் விலை தொடர்ந்து அதிகரிப்பு உள்ளதால், இதனால்  டீ விலை 12 ரூபாய், காபி 15 ரூபாய் ஆக உயர்ந்ததுள்ளது.


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதன் எதிரொ லியாக  அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர தொடங்கியுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வணிக பயன்பாடு உள்ள கியாஸ் சிலிண்டர் விலையும் ரூ.26 அதிகரித்துள்ளது. இதனால் ஓட்டல், டீ கடைகளில் உணவுப்பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது.
கியாஸ் மட்டுமின்றி கடந்த சில நாட்களாக தனியார் பால் விலை, டீத்தூள், காபித்தூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டீ, காபி விலை உயர்வு
இதன் காரணமாக சிறிய ஓட்டல் முதல் பெரிய ஓட்டல்  வரை அனைத்து உணவுப் பண்டங்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஈரோட்டில் டீ, காபி விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
பால், கியாஸ் விலை உயர்வு காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ விலை ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும், காபி விலை ரூ.15 -ல் இருந்து ரூ.17 ஆகவும் உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீ கடைகள் உள்ளன. இதில் பாதிக்கு பாதி டீக்கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப் பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் அனைத்து கடைகளிலும் டீ, காபி விலை உயர்ந்து விடும்.
அறிவிப்பு நோட்டீஸ்
இதேப்போல் பாஸ்ட்புட் கடைகளிலும் சில உணவு வகைகள் உயர்ந்துள்ளன. இது தொடர்பாக அந்தந்த டீக்கடைகளில் புதிதாக உயர்த்தப்பட்டுள்ள டீ , காபி விலை குறித்த அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்ட்டு இருந்தன.
இதனால் இன்று டீ, காபி குடிக்க வந்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, தற்போது டீ, காபி விலை உயர்வு என்று உயர்ந்து வருவதால் மக்கள் திணறி வருகின்றனர்.

Similar News