உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கோவை மெக்கானிக் கதி என்ன?

Published On 2022-04-02 13:42 IST   |   Update On 2022-04-02 13:42:00 IST
பெருந்துறை அருகே தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கோவை மெக்கானிக் உடலை இன்று 2 &வது நாளாக தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
பெருந்துறை:

பெருந்துறை அருகே தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கோவை மெக்கானிக் உடலை இன்று 2 -வது நாளாக தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவ னத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று சரவணன் தனது  நண்பர் செந்தமிழ் செல்வன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஈரோடு மாவட் டத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் நேற்று மாலை 4 மணி அளவில் பெருந்துறையில் இருந்து ஈரோட்டுக்கு செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் சரவணன் மற்றும் செந்தமிழ் செல்வன் குளித்துக் கொண்டிருந்தனர். சரவணனுக்கு நீச்சல் தெரியாது என கூறப் படுகிறது.

இந்நிலையில் திடீரென சரவணன் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது தண்ணீர் அவரை அடித்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தமிழ் செல்வன் காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டு உள்ளார். அந்த வழியாக சென்ற  மக்கள் சத்தம் கேட்டு வந்தனர். அதற்குள் சரவணை தண்ணீர் அடித்து சென்று விட்டது.

இது குறித்து பெருந்துறை போலீசாருக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  பின்னர் இரவு நேரம் என்பதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக பெருந்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சரவணனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட சரவணன் கதி என்ன? என தெரியவில்லை.  சரவணன் உறவினர்கள் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் பதற்றத்துடன் நின்று கொண்டிருக்கின்றனர். இதனால் அங்கு பரபரப் பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Similar News