உள்ளூர் செய்திகள்
தாளவாடி மலை பகுதியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு
தாளவாடி மலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு செய்தார்.
ஈரோடு:
தாளவாடி மலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, தலமலை, ஆசனூர் மற்றும் கேர்மாளம் ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தலமலை ஊராட்சி பெஜலட்டி பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவின் சார்பில் துடைப்பம் தயாரிக்கும் பணிகளையும், அதே பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு பழுதடைந்த மையத்தினை விரைவாக சரி செய்திட அலுவல ர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பசுமை வீட்டினையும், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பெஜலட்டி பகுதியில் தரைப்பாலம் கட்டும் பணியினையும் ஆய்வு செய்தார்.
தடசளட்டி பகுதியில் 15&வது நிதிக்குழு மானியத் திட் டத்தின் கீழ் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள் ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியினையும், அதேகுடியிருப்பு பகுதியில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணியினையும், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளியினையும் ஆய்வு மேற்கொண்டு கு ழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு உணவினை ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடம் கலந்துரை யாடினார்.
மேலும் கானக்கரை பகுதியில் மேற்கொள்ளப் பட்டு வரும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகளையும், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்ட த்தின் கீழ் சமுதாய தொழில் திறன் பள்ளியில் உன்னிக் குச்சி மூலமாக வீட்டு உபயோகப் பொரு ட்கள் மற்றும் அலுவலக தளவாட பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளும் பயிற்சியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து அலுவ லர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 8 பேர்களுக்கு ரூ.3,02,100 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தலமலை ஊராட்சி ராமரணை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.9.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சமுதாய நலக்கூடத்திற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
ஆய்வுகளின் போது உதவி இயக்குநர் (ஊராட் சிகள்) உமாசங்கர், உதவி இயக்குநர் (வேளாண் மைத்துறை) மகாலிங்கம், தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாளவாடி தாசில்தார் உள்பட துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.