உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

Published On 2022-04-01 15:48 IST   |   Update On 2022-04-01 15:48:00 IST
சுதந்திர திருநாள் அமுதா பெரு விழாவையொட்டி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கியது.
ஈரோடு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இணைந்து 75-வது சுதந்திர தினவிழா சுதந்திர திருநாள் அமுதா பெரு விழாவையொட்டி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கியது.

மாரத்தான் போட்டியை கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

விளையாட்டு விடுதி மாணவிகள் 80&க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர்.

மாரத்தான் ஓட்டமானது ஈரோடு வ. உ. சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. வீரபத்திர வீதி, சக்தி ரோடு, சம்பத் சாலை, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக மீண்டும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நிறை வடைந்தது. 

மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

Similar News