உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

பட்டா கேட்டு குடிசை போட முயன்றதால் பரபரப்பு

Published On 2022-04-01 14:57 IST   |   Update On 2022-04-01 14:57:00 IST
ஓட்டப்பாறை ஊராட்சி சரவணா நகர் பகுதியில் வெளியூரை சேர்ந்த சிலர் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வேண்டுமென திடீரென குடிசை அமைக்க முயன்றனர். இதற்கு உள்ளூர் பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலை:

சென்னிமலை அருகே ஓட்டப்பாறை ஊராட்சி சரவணா நகர் பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 90 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழ்ங்கப் பட்டது.

ஆனால் அங்கு ஒரு சிலரை தவிர வேறு யாரும் வீடு கட்டவில்லை. 

இதனால் வெளியூரை சேர்ந்த சிலர் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வேண்டுமென திடீரென குடிசை அமைக்க முயன்றனர். 

இதற்கு உள்ளூர் பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை தாசில்தார் கார்த்திக் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது முதல் கட்டமாக உள்ளூரை சேர்ந்த தகுதியுள்ள நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தார். 

அதைத்தொடர்ந்து இரு தரப்பு மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News