உள்ளூர் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் ஒன்றியக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் ஒன்றியக்குழு கூட்டம்- மருத்துவக்கல்லூரி எதிரே வணிக வளாகம் கட்ட தீர்மானம்

Published On 2022-03-31 18:08 IST   |   Update On 2022-03-31 18:08:00 IST
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் விமலா முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் வரவேற்றார்.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மற்றும் அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றித் தர கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ம ருத்துவமனை எதிரே சமத்துவபுரம் கட்டியது போக மீதமுள்ள இடத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டப்படும்.

கிராம ஊராட்சிகளுக்கு திறன் உருவாக்கம் மற்றும் பயிற்சி அளித்திட ரூ. 50 லட்சம் மதிப்பில் மாவட்ட அளவிலான வள மையம் ஒன்றினை அலுவலக வளாகத்தில் கட்டுவது.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நியமன குழு, வேளாண் உற்பத்தி, கல்வி, பொது நோக்கங்கள் ஆகிய குழுவுக்கு தலைவராக ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், செயல் உறுப்பினராக வட்டார வளர்ச்சி அலு வலர் நடராஜன், மற்றும் உறுப்பி னர்களாக ஒன்றியக்குழு துணைத்தலைவர் விமலா முருகன் உட்பட கவுன்சிலர்களை நியமனம் செய்வது.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேதமடைந்த 48 தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றுவது என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் நீலமேகம், கரிகாலன், ஆனந்திநகுலன், அன்பழகன், ரவிக்குமார் பிரியாராஜராம், பூங்கலியன், சுமதிகாமராஜ், சுமதி கோவிந்தன், கல்யாணி அண்ணாமலை, லலிதா அரவிந்தன், செல்வராசு, ராஜிவ்காந்தி, ராதிகா சக்கரபாணி, தனம்மணி, மணிராமசாமி, சுகன்யா சுரேந்திரன், தேவராஜன், கண்ணம்மாள் சதாசிவம், ரூபா முரளி, மணிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News