உள்ளூர் செய்திகள்
கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-03-31 16:13 IST   |   Update On 2022-03-31 16:13:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ராமச்சந்திரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுக்கா, கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் ராமச்சந்திரன் (வயது 36) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி கல்லாநத்தம் கிராமம் நாச்சியம்மன் கோவில் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தார். அப்போது அவர் சின்ன சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.

இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ராமச்சந்திரன் மீது சின்னசேலம் காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ராமச்சந்திரனை சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ராமச்சந்திரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News