உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் 5 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை
ஈரோடு மாவட்டத்தில் 5-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 5-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 3-ம் அலை கட்டுக்குள் வரத் தொடங் கியுள்ளது. உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தினசரி பாதிப்பு அதிகமாக பரவியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வந்தது. ஒருநாள் தினசரி பாதிப்பு ஆயிரத்து 400 வரை பதிவானது. தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டதால் 3-ம் அலையில் பெரும்பாலான மக்களுக்கு லேசான அறிகுறியே இருந்தது.
இதனால் அவர்கள் மருத்துவர் அறிவுரைப்படி வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். ஒரு சிலர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிக்கப்பட்டது.
இதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்கள் உடனு க்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது போன்று பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
கடந்த 25-ந் தேதி மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் யாருக்கும் ஏற்படவில்லை. தொடர்ந்து 5 நாட்களாக மாவட்டத்தில் யாருக்கும் புதிய பாதிப்பு ஏற்பட வில்லை.
இதுவரை மாவட்டத்தில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 ஆக பதிவாகியுள்ளது.
இதுவரை மாவட்டத்தில் குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் ஒருவர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்டத்தில் பாதிப்பு வெகுவாக குறைந்தாலும் மக்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.