உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93-க்கு விற்பனை
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 21-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது.
அதிலிருந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. 24-ந் தேதி மட்டும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. பின்னர் தொடர்ந்து அதிகரி த்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் டீசல் ரூ.107.18-க்கு விற்பனையானது. இன்று வரலாறு காணாத வகையில் மேலும் 75 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93-க்கு விற்பனையானது.
இதேபோல் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.97.26-க்கு விற்பனையானது. இன்று மேலும் 76 காசுகள் உயர்ந்து 98.02 காசுக்கு விற்பனை ஆனது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள், சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருவதால் இதன் தாக்கம் எதிரொலியாக மற்ற பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.