உள்ளூர் செய்திகள்
கைது

கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

Published On 2022-03-30 16:17 IST   |   Update On 2022-03-30 16:17:00 IST
தியாகதுருகம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே புது மாம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சின்னமாம்பட்டு பிரிவு சாலை அருகே சந்தேகப்படும் படியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் புது மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (21), மற்றும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (21) என்பதும் மோட்டார் சைக்கிளில் சுமார் 100 கிராம் அளவிலான கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 2பேரையும் கைது செய்தனர். இதில் சதீஷ் குமார் என்பவர் டிப்ளமோ மெக்கானிக் படித்தவர் என்பதும், கோவிந்தன் பி.காம் முடித்தவர் என்பதும். மேலும் இவர்கள் இருவரும் தற்பொழுது அதே பகுதியில் செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Similar News