உள்ளூர் செய்திகள்
கைது செய்யபட்ட 3 பேரை படத்தில் காணலாம்.

தோட்டத்தில் கட்டி இருந்த ஆட்டை திருடிய 3 பேர் கைது

Published On 2022-03-30 14:28 IST   |   Update On 2022-03-30 14:28:00 IST
கவுந்தப்பாடி அருகே தோட்டத்தில் கட்டி இருந்த ஆட்டை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அருகே தோட்டத்தில் கட்டி இருந்த ஆட்டை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் அடுத்த அய்யன் வலசு போடி காடு பகுதியை சேர்ந்த வர் நடராஜ். இவரது மனைவி சுலோசனா (48). இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வருகிறார். 

மேலும் ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று சுலோசனா அந்த பகுதியில் ஆடுகளை கட்டி விட்டு தனது தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

அவர்கள் அங்கு கட்டி வைத்து இருந்த ஒரு ஆட்டை திருடி கொண்டு மோட்டார் சைக்கிளிளில் தப்பி சென் றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுலோ சனா சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் துரத்து சென்று சுற்றி வளைத்து பிடித்தனர்.
இது குறித்து சுலோசனா கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்தார். 

போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் கள் 3 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கள் கவுந்தப்பாடி  அய்யன் காடு பகுதியை சேர்ந்த அருண்குமார், திருவள்ளு வர் நகர் ஆனந்த், பி. மேட்டு பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறி முதல் செய்தனர்.

Similar News