உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தனியார் ஆஸ்பத்திரி மருந்து கடையில் தீ விபத்து

Published On 2022-03-28 13:25 IST   |   Update On 2022-03-28 13:25:00 IST
தனியார் ஆஸ்பத்திரி மருந்து கடையில் தீ விபத்து நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

தனியார் ஆஸ்பத்திரி மருந்து கடையில் தீ விபத்து நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் தலைமை மின் பொறியாளர் அலுவலகம் எதிரே தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 

மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மனைக்கு  மருந்து கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து, மெடிக்கல் கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றனர். 

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பூட்டப்பட்டிருந்த மருந்து கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால், மருத்துவமனையில் இருந்த நோயாளிகளில் ஒரு சிலருக்கு  மூச்சு திணறல் ஏற்பட்டது. இதுகுறித்து நோயாளியின் உறவினர்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்,  பிடித்த தீயை சுமார் 50 நிமிடம் போராடி தீயையும், கரும்புகையையும் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் உயிர் காக்கும் மருந்துகள், பிரிட்ஜ், போன்றவை நாசமானது. 

தீ விபத்துக்குண்டான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News