உள்ளூர் செய்திகள்
ஆய்வகத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

அரசு பள்ளியில் ஆய்வகம் திறப்பு

Published On 2022-03-28 12:24 IST   |   Update On 2022-03-28 12:24:00 IST
திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏடிஎல் ஆய்வகத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஏடிஎல் ஆய்வகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி ஏடிஎம் ஆய்வகத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

தலைமையாசிரியர் கலாராணி வரவேற்றார். இதில் ஏடிஎல் ஆய்வகத்தை ஏற்படுத்திக் கொடுத்த ரோபோ மிராக்கல் நிறுவனத்தின் நிர்வாகிகள் ருத்ரேஷ், சூரஜ், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், ஓவிய ஆசிரியர் குமரன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவ&மாணவிகள், ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News