உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்.

காவலாளியிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது

Published On 2022-03-27 15:28 IST   |   Update On 2022-03-27 15:28:00 IST
கவுந்தப்பாடி அருகே காவலாளியிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கவுந்தப்பாடி அருகே காவலாளியிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையம் ஓவியர் வீதியில் வசிப்பவர் அய்யாச்சாமி (57). இவர் ஆப்பக்கூடலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி அதிகாலை சைக்கிளில்  வேலைக்கு சென்றார். பெருந்தலையூர் மயானம் அருகே சென்று கொண்டிருந்த போது அவரை வழி மறித்த 3 வாலிபர்கள் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.

இச்சம்பம் குறித்து அய்யாச்சாமி கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ் பெக்டர் சுபாஷ் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடிவந்தார். 

இந்நிலையில் கவுந்தப்பாடி அடுத்துள்ள சிறுவலூர் ரோடு அய்யன்வலசு பிரிவு அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் விஜயமங்கலம் மூங்கில் பாளையத்தை சேர்ந்த கவின் என்கிற லோகேஷ் (23), பவானி கூலிக்காரன் பாளையம் சேர்ந்த வேல் பிராகாஷ் என்கிற பிரகாஷ் (25) என்பதும், 2 பேரும் பெருந்தலையூர் மயானம் அருகே அய்யாச்சாமியிடம் வழிப்பறி செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது  செய்து அவர்களிடம்  இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார்  பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும்  கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News