உள்ளூர் செய்திகள்
வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது
காய்கறி வரத்து அதிகரிப்பு எதிரொலியாக வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது தக்காளி கிலோ ரூ.7&க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
ஈரோடு:
காய்கறி வரத்து அதிகரிப்பு எதிரொலியாக வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது
தக்காளி கிலோ ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி தினசரி மார்க்கெட்டில் ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தற்போது காய்கறிகள் விளைச்சல் அதிகரித்து காணப் படுவதால் காய் கறிகள் வரத்தும் அதிகரித்து காணப் படுகின்றன. இதனால் கடந்த சில நாட்களாகவே வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்து வருகின்றன. ரூ.10 முதல் 20 வரை காய்கறிகள் விலை குறைந்துள்ளது.
இன்று வ. உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
கத்திரிக்காய்-15, வெண்டைக்காய்- 30 முதல் 35, பீட்ரூட்-40, பாவைக் காய்-30, புடலங்காய்-15, முருங்கைக்காய்-40, அவரைக்காய்-30 முதல் 40, சேனைக்கிழங்கு-25, முட்டைக்கோஸ்-15 முதல் 20, கேரட்-60 முதல் 70, பீன்ஸ்-30 முதல் 40, இஞ்சி-50, பச்சபட்டாணி-70, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம்-20, 3 கிலோ தக்காளி-20. கிலோ கணக்கில் ஒரு கிலோ தக்காளி ரூ.7-க்கு விற்கப்பட்டு வருகிறது.