உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வீட்டில் புகுந்த சாரை பாம்பு

Published On 2022-03-26 15:03 IST   |   Update On 2022-03-26 15:03:00 IST
கோபிசெட்டிபாளையத்தில் இன்று காலை ஒரு வீட்டில் சாரை பாம்பு புகுந்தது-. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபி:

கோபிசெட்டிபாளையத்தில் இன்று காலை ஒரு வீட்டில்  சாரை பாம்பு புகுந்தது-. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


கோபிசெட்டிபாளையம் அடுத்த நாகமலை விரிவாக்கம் வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (43). இவரது வீட்டின் படுக்கை அறையில் இன்று காலை திடீரென ஒரு சாரை பாம்பு புகுந்தது. 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அதை விரட்டி முயற்சி செய்தனர். 

ஆனால் பாம்பு அங்கு பதுங்கி கொண்டது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த சாரை பாம்பை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு விட்டனர். 
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News