உள்ளூர் செய்திகள்
காலி குடங்களுடன் சாலை மறியல் செய்த பொதுமக்கள்.

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-03-26 07:00 GMT   |   Update On 2022-03-26 07:00 GMT
கோசனம் பஸ் நிறுத்தம் அருகே கோபி&நம்பியூர் சாலையில் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நம்பியூர்:

கோசனம் பஸ் நிறுத்தம் அருகே கோபி&நம்பியூர் சாலையில் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நம்பியூர் அருகே உள்ள கோசனம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோ கிக்கப்பட்டு வந்தது.

 இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனையடுத்து இன்று காலை 7 மணி அளவில் கோசனம் பஸ் நிறுத்தம் அருகே கோபி&நம்பியூர் சாலையில் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. நாங்கள் குடிநீர் விலைக்கு வாங்கி உபயோகித்து வருகிறோம். நாளொன்றுக்கு ரூ.250&க்கும் மேல் குடிநீருக்காக செலவு செய்கிறோம் என கூறினர்.

 இதேபோல் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில்   கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. பொது மக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களை தேடி செல்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து  குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News