உள்ளூர் செய்திகள்
ஆசனூர் வனப்பகுதியில் காட்டுத்தீ
ஆசனூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் விலை உயர்ந்த மரம், செடி, கொடிகள் எரிந்து சேதமானது.
தாளவாடி:
ஆசனூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் விலை உயர்ந்த மரம், செடி, கொடிகள் எரிந்து சேதமானது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் மழை பெய்யாததால் பசுமையாக இருந்த மரம், செடி, கொடிகள் காய்ந்து வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதும், விவசாய நிலத்தை சேதபடுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் அரேப்பாளையம்& கேர்மாளம் செல்லும் சாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த மரம், செடி, கொடிகள் எரிந்து சேதமடைந்தது.
வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிவதைக் கண்ட மலைகிராம மக்கள் உடனடியாக ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத் துறையினர் விரைந்து சென்று 4 மணி நேர போராட்டத்திக்கு பிறகு தீயை அணைத்தனர்.