உள்ளூர் செய்திகள்
ஓட்டல் கடைக்காரர் விபத்தில் பலி
கோபிசெட்டிபாளையத்தில் ஓட்டல் கடைக்காரர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையத்தில் ஓட்டல் கடைக்காரர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இரவு நேர ஓட்டல் கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் மொபட்டில் மொடச்சூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஈரோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பூரணசந்திரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.