உள்ளூர் செய்திகள்
குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்தார்.

சென்னிமலை முருகன் கோவிலில் இன்று இரவு திருக்கல்யாணம்

Published On 2022-03-17 14:37 IST   |   Update On 2022-03-17 14:37:00 IST
பங்குனி உத்திர விழாவையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் இன்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை காலை தேரோட்டம் நடக்கிறது.
சென்னிமலை:

பங்குனி உத்திர விழாவையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் இன்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை காலை தேரோட்டம் நடக்கிறது/

மலைகளில் தலையாய மலையாக போற்றப்படும் சென்னிமலை மலை மீது குமரக் கடவுள் பாலதண்டாயுதமூர்த்தம் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினமும் படி வழியாக முருகப்பெருமானுக்கு எருதுகள் மூலம் திருமஞ்சனம் (தீர்த்த குடம்) கொண்டு செல்வது தனிச்சிறப்பு. 

இங்கு தைப்பூச தேர் மற்றும் பங்குனி உத்திர தேர் என தனித்தனியாக இரண்டு பெரிய தேர் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர தேரோட்டம் வெகு சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கோரோனா பெருந் தொற்று பரவலால் தேரோட்டம் நடைபெறவில்லை.

இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு பங்குனி உத்திரவிழா நேற்று மலை மேல் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி பங்குனி உத்திர விழாவை தொடங்கி வைத்தனர்.

கொடியேற்றத்திற்கு முன் முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும். மூலவர்க்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தலைமைக்குருக்கள் ஸ்ரீ லஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்ய சேவல் கொடியை ஏற்றி விழாவை முறைப்படி தொடங்கி வைத்தனர். பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் இன்று இரவு நடக்கிறது, தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.20 மணிக்கு நடக்கிறது, மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும், 19-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 20-ந்தேதி காலை மகாதரிசனம் நடக்கிறது. இரவு மஞ்சள் நீர் நிகழ்சியுடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது.

Similar News