உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

7 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

Published On 2022-03-17 14:25 IST   |   Update On 2022-03-17 14:25:00 IST
சென்னிமலையில் ஈங்கூர் ரோட்டில் அதிக பாரம் ஏற்றி வந்த 7 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னிமலை:

சென்னிமலையில் ஈங்கூர்  ரோட்டில் அதிக பாரம் ஏற்றி வந்த 7 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 
பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலக இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர் மற்றும் கதிர்வேல் ஆகியோர் நேற்று மாலை   சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோட்டில்  வாகனங்களை தணிக்கை செய்தனர். 

 அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். ஆவணங்களை சரிபார்த்தபோது கடந்த ஒரு வருடமாக அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.   இதனால் டிப்பர் லாரியை  பறிமுதல் செய்து பெருந்துறை ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஓட்டிச் சென்றனர்.  

மேலும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம்    விதித்தனர்  மேலும்,  இவ்வழியாக வந்த சரக்கு  வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரி  உள்பட ஜேசிபி வாகனம்   சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு ஏர் ஹாரன் பயன்படுத்தியது அதிக பாரம் ஏற்றயது, முறையான ஆவணங்கள் இல்லாதது ஆகியவற்றுக்காக மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

Similar News