உள்ளூர் செய்திகள்
12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் இன்று 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இன்று 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றது.
உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படு த்தியது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர் களுக்கும், பின்னர் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக் கப்பட்டு செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 45 வயது தாண்டிய அனை வருக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. பின்னர் 18 வயது தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி ஒரு பங்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இந்தியாவில் 3-ம் அலை உருவாகி வேகமாக பரவியது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. இதன் காரணமாக 12 வயது முதல் 18 வயதுடைய சிறுவர் களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் முதற் கட்டமாக 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. பள்ளிகள் கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கும் நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களுக்குப் பிறகு 2-ம் தவணைத் தடுப்பூசியும் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 12 முதல் 14 வயது உடைய சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வயது உடைய சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் 12 வயது முதல் 14 வயதுக் குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் 66,300 பேர் உள்ளனர். இவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங் கியுள்ளது.
இன்று முதல் தினமும் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் செலுத்தப்பட்டு வரும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தப்பட்டு சில மணி நேரம் அவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தனர். 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.