உள்ளூர் செய்திகள்
வீடு, வீடாக சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் குறைகேட்டார்.

பொதுமக்களிடம் குறைகேட்ட எம்.எல்.ஏ.

Published On 2022-03-15 15:52 IST   |   Update On 2022-03-15 15:52:00 IST
ராஜபாளையம் அருகே தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகேட்டார்.
ராஜபாளையம் 

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் மற்றும் மேலூர் துரைசாமிபுரம் ஊராட்சி பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு இயக்க முகாம் நடந்தது. 

இதில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் வீடு,வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். 

அதற்கு  உடனுக்குடன் தீர்வுகாணும் வகையில்   வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியரிடம்  பேசி குடிநீர் சீராக வழங்கவும், வாறுகால்களை உடனடியாக தூர்வாரவும் துரித நடவடிக்கைகளை  மேற்கொண்டனர். 

உடனடியாக தீர்க்கமுடியாத கோரிக்கைகளை அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளின் கவனதிற்கு கொண்டு சென்று மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  எம்.எல்.ஏ. உறுதி கூறினார்.

இந்தமுகாமில்  இலவசமாக ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், தொலை பேசி எண் இணைத்தல், புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், மற்றும் புதிய ரேசன்கார்டு விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

இதுபோல் ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஆதார் அட்டை திருத்தம் செய்ய இலவச முகாம் அமைக்கப்படும் என எம்.எல்.ஏ. கூறினார்.
 
இந்த நிகழ்வில் வட்டாட்சியர் ராமச்சந்திரன்,  வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ்,    மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி,பேரூர் செயலாளர் இளங்கோவன், கிளை செயலாளர்கள் சீதாராமன், சின்னத்தம்பி, வைரவன், தங்கப்பன்,   மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

வீடு, வீடாக சென்று குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வும் ஏற்படுத்தி கொடுத்த எம்.எல்.ஏ. தங்கபாண்டியனை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

Similar News