உள்ளூர் செய்திகள்
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைப

மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

Published On 2022-03-15 13:14 IST   |   Update On 2022-03-15 13:14:00 IST
மண்பாண்ட தொழிலாளர்கள் மழைக்காலத்தில் நிவாரணம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது, அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பொது மக்களிடையே 324 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் சோழமாதேவி கிராமத்தில் அம்பிகாபுரம் தெருவைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், பல ஆண்டுகளாக மண் பாண்டம் தொழில் செய்து வருகின்றோம், சுமார் 10 ஆண்டு காலமாக மழைக்கால நிவாரணத் தொகையாக தமிழக அரசு 5 ஆயிரம் வழங்கி வந்தது,

ஆனால் தற்போது எங்களுக்கு அந்த தொகை வழங்கப் படவில்லை, எங்களுக்கு வேறு தொழில் கிடையாது, இந்த மண்பாண்டம் தொழிலை வைத்துதான் எங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம், மழைக்கால நிவாரண நிதி எங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Similar News