உள்ளூர் செய்திகள்
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் சார்பாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கொள்ளிடம் ஆற்றங்கரையில் நடை பயிற்சிக்கு பாதை அமைத்து தர வேண்டும்

Published On 2022-03-13 12:31 IST   |   Update On 2022-03-13 12:31:00 IST
திருமானூரில் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பின் செயல் வீரர்கள் கூட்டம் நடை பெற்றது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பின் செயல்வீரர்கள் கூட்டம் திருமானூர்  பஸ் நிலையம் தனியார் வளாகத்தில் வரதராஜன் தலைமையில் நடை பெற்றது. 

கூட்டத்தில் திருமானூர் கீழப்பலூர் ஆகிய ஊர்களில் உள்ள பயணியர் நிழற்குடை பழுதடைந்துள்ளது. அதை புதுப்பித்து தர வேண்டும். திருமானூரில் கொள்ளிடபாலத்தில் மின் விளக்கு ஒளி ஏற்படுத்தி தர வேண்டும்.

திருமானூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் மத்திய,மாநில அரசு கள் வழங்கப்படும் தொகுப்பு வீடு கட்டும் பணிக்கு அரசு வழங்கும் தொகையைஉடனே வழங்க வேண்டும்.

திருமானூர்  கொள்ளிடம் ஆற்றங் கரையில் நடை பயிற்சிக்கு பாதை அமைத்துத் தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News