உள்ளூர் செய்திகள்
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 18 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு
அரியலூரில் நடை பெற்ற தேசிய மக்கள் நீதி மன்றத்தில் 18 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான மகாலட்சுமி தொடங்கி வைத்தார்.
அமர்வு நீதிபதி ஆனந்தன், குடும்பநல நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன், கூடுதல் சார்பு நீதிபதி மும்மூர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர், செந்தில்குமார், திவ்யா,
மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் உத்திராபதி, அசோகன், முத்துகிருஷ்ணன், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் சார்பு நீதிபதி திருமணி, சிறப்பு சார்பு நீதிபதி வடிவேல், ராமச் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 22 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. போக்குவரத்து விதிமீறல்கள் 16 ஆயிரத்து 638 வழக்குகள் தீர்வு காணப்பட்டது, 890 சிறு குற்ற வழக்குகளும், 18 சிவில் குற்ற வழக்குகளும், 31 மோட்டார் வாகன சாலை விபத்து வழக்குகளும், 2 குடும்பநல வழக்குகளும், 3 காசோலை வழக்குகளும் தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, வக்கீல் சங்க பொறுப்பாளர்கள் மனோகர், முத்துக்குமார், வழக்கறிஞர்கள், காவல் துறையினர், அரசுத்துறை, அதிகாரிகள், வங்கி அதிகாரி கள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.