உள்ளூர் செய்திகள்
வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி
திருமானூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூரில் பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் இறுதியாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவிகள் ஊரக மற்றும் வேளாண் பணி அனுபவ பயிற்சி பாடத்திட்டத்தின் கீழ் களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்கல்லூரி முதல்வர் வள்ளியப்பன், ஊரக வேளாண் பயிற்சி அனுபவத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்திகணேஷ் மற்றும் பேராசிரியை சுகந்தி ஆகியோரின் வழிகாட்டுதலில் கடந்த 28-ந் தேதி முதல் இப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர் ஆகியோரின் உதவியோடு திருமானூர் பகுதி விவசாயிகளை அணுகி அவர்கள் மேற்கொண்டு வரும் உழவு முறை,உரமிடல், களையெடுத்தல், பூச்சிக் கொல்லி தெளித்தல் அவற்றை கையாளும் யுக்திகளை பற்றி அறிந்து கொண்டனர்.
நெல்சாகுபடி, பருத்தி, நிலக்கடலை, கீரை வகைகள், மாம்பழம், எலுமிச்சை மற்றும் கிழங்கு வகைகளை பயிரிட்டு சந்தைப்படுத்துவது, கால்நடை, கோழிகள்வளர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் அறிந்து கொண்டனர்.
தொடர்ந்து திருமானூர் கிராமங்களில் களப் பயிற்சி மேற்கொண்டு, முன்னோடி விவசாயிகளுடன் கலந்துரையாடினர். அப்போது மாணவிகள் திருமானூரின் வரைபடம், இயக்க வரைபடம்,பிரச்சினை மற்றும் தீர்வு மரம், காலக் கோடு, வென்படம், தினசரி கால அட்டவணைமற்றும் பருவ நாட்காட்டி ஆகியவற்றை வரைந்து காட்டினர்.
மேலும் திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு காடு வளர்ப்பு, மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.